2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததன் மூலம் இலங்கை சிறுவன் ஒருவன் தனது தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாக்யராசா முரளிதரம் என்ற இந்தச் சிறுவன்,
பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவர் ஆவார்.
குறித்த சிறுவன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட சோழன் உலக சாதனை புத்தகத்தில் இந்த குழந்தை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று சோழன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
உலக வரைபடத்தில் உள்ள நாணயங்கள், ஆட்சியாளர்களின் பெயர்கள், தலைநகரங்கள், மொழிகள், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்பு கொள்ளும் திறன் போன்ற பகுதிகள் பற்றிய இந்த மாணவனின் இளம் வயதிலேயே அசாதாரண அறிவு மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்வதன் மூலம் அந்த மொழிகளிலும், சர்வதேச பொது அறிவிலும் சோழன் அமைப்பாளர்கள் இந்த மாணவரை உலக சாதனை புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த மதிப்பீட்டின் நோக்கம் ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.
இந்த மாணவனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் சேர்ப்பதற்கான பரீட்சை பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது..
அசாதாரண நினைவாற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கைத் தமிழ் சிறுவன். 2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததன் மூலம் இலங்கை சிறுவன் ஒருவன் தனது தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.பாக்யராசா முரளிதரம் என்ற இந்தச் சிறுவன், பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவர் ஆவார்.குறித்த சிறுவன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட சோழன் உலக சாதனை புத்தகத்தில் இந்த குழந்தை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று சோழன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.உலக வரைபடத்தில் உள்ள நாணயங்கள், ஆட்சியாளர்களின் பெயர்கள், தலைநகரங்கள், மொழிகள், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்பு கொள்ளும் திறன் போன்ற பகுதிகள் பற்றிய இந்த மாணவனின் இளம் வயதிலேயே அசாதாரண அறிவு மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்வதன் மூலம் அந்த மொழிகளிலும், சர்வதேச பொது அறிவிலும் சோழன் அமைப்பாளர்கள் இந்த மாணவரை உலக சாதனை புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.இந்த மதிப்பீட்டின் நோக்கம் ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.இந்த மாணவனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் சேர்ப்பதற்கான பரீட்சை பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.