• Apr 17 2026

சுவிஸில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர்; அதிரடியாக நாடு கடத்திய அரசு

Chithra / Feb 20th 2026, 8:04 am
image


பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கையை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.


பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு தனது நண்பரின் மனைவியைத் அச்சுறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 

குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தினால் 9 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது அதனை முற்றாக மறுத்த இலங்கையர், தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று நீதிமன்றில் தெரிவித்தார்.


எனினும் இது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளன்று, அந்த நபர் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகவில்லை.


அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைப்பதற்கு முன்பே அவர் தலைமறைவானார்.


குற்றவாளியான இலங்கையர் இல்லாத நிலையிலேயே, நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்ததுடன், குற்றவாளியான இலங்கையரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.


இந்நிலையில் குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.


சுவிஸில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர்; அதிரடியாக நாடு கடத்திய அரசு பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கையை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு தனது நண்பரின் மனைவியைத் அச்சுறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தினால் 9 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது அதனை முற்றாக மறுத்த இலங்கையர், தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று நீதிமன்றில் தெரிவித்தார்.எனினும் இது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளன்று, அந்த நபர் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகவில்லை.அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைப்பதற்கு முன்பே அவர் தலைமறைவானார்.குற்றவாளியான இலங்கையர் இல்லாத நிலையிலேயே, நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்ததுடன், குற்றவாளியான இலங்கையரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.இந்நிலையில் குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement