• Nov 22 2024

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை பெண் திடீர் மரணம்..! மகள் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 19th 2024, 11:33 am
image

 

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி - கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த 57 வயதுடைய மார்கரெட் ஐராங்கனி   என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த ஐரங்கனியின் சடலம் நேற்று (17) டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாயின் மரணம் தொடர்பில் மகள் தெரிவிக்கையில், 

நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கவீனமடைந்த தந்தை மற்றும் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா வெளிநாடு சென்று எனக்கும், அக்காவுக்கும் பணம் அனுப்பினார்.

கடந்த 5 ஆம் திகதி தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அம்மா உடன் இருந்த பெண் அழைப்பினை ஏற்படுத்தி  அம்மாவிற்கு மூச்சு விடுவதற்கு கடினமாக உள்ளதாக கூறினார்.

இதன் பின்னர் அன்று அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் கடந்த 6 ஆம் திகதி அம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து டுபாயில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் உதவியுடன் தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் எட்டு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அம்மாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வந்தோம் என மகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாவின் பூதவுடல் இன்று (19) பிற்பகல் ஹல்லொலுவ தொரகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகள் தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை பெண் திடீர் மரணம். மகள் வெளியிட்ட தகவல்  வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கண்டி - கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த 57 வயதுடைய மார்கரெட் ஐராங்கனி   என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த ஐரங்கனியின் சடலம் நேற்று (17) டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.இந்நிலையில், தாயின் மரணம் தொடர்பில் மகள் தெரிவிக்கையில், நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கவீனமடைந்த தந்தை மற்றும் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா வெளிநாடு சென்று எனக்கும், அக்காவுக்கும் பணம் அனுப்பினார்.கடந்த 5 ஆம் திகதி தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அம்மா உடன் இருந்த பெண் அழைப்பினை ஏற்படுத்தி  அம்மாவிற்கு மூச்சு விடுவதற்கு கடினமாக உள்ளதாக கூறினார்.இதன் பின்னர் அன்று அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் கடந்த 6 ஆம் திகதி அம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதனையடுத்து டுபாயில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் உதவியுடன் தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் எட்டு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அம்மாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வந்தோம் என மகள் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அம்மாவின் பூதவுடல் இன்று (19) பிற்பகல் ஹல்லொலுவ தொரகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகள் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement