இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி, வரலாற்றில் முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில் நாளை இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், நாளை இடம்பெறும் அமர்வில் அவர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சுகாதார நிபுணர் மற்றும் விரிவுரையாளரான அவர் தனது அரசியல் நிபுணத்துவத்தையும் நிரூபித்துள்ளார்.
சுகாதார முன்முயற்சிக்கான வாக்கெடுப்பின் போது அவரது தொழில்முறை அரசியல் அர்ப்பணிப்பு மிகப்பெரிய அரசியல் உத்வேகத்தையும் வவேற்பையும் அளித்தது.
ஃபாரா ரூமி, கிரென்சென் நகரில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமான ரெஸ்டெஸ்பார் கிரென்சென் தலைவராகவும் பணியாற்றுகிறார், இது உணவு வீணாவதைக் குறைக்க உதவுகிறது.
அவர் அண்மையில் கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராக மாறியுள்ளார்.
அத்துடன் ஃபரா ரூமி, தற்போது சோலோதூர்ன் மாகாணத்தின் மக்கள்தொகையை தேசிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தேசிய பாராளுமன்றின் உறுப்பினராகவும் தெரிவாகியுள்ளார்.
இலங்கையில் பிறந்த ரூமி ஆறு வயதாக இருக்கும்போது 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்ஸர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேண்தகு சுகாதார நலன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தாம் அரசியலில் செயற்பட போவதாக ஃபரா ரூமி கூறியுள்ளார்..
சுவிஸ் பாராளுமன்றுக்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் samugammedia இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி, வரலாற்றில் முதல் முறையாக சுவிட்ஸர்லாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில் நாளை இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், நாளை இடம்பெறும் அமர்வில் அவர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சுகாதார நிபுணர் மற்றும் விரிவுரையாளரான அவர் தனது அரசியல் நிபுணத்துவத்தையும் நிரூபித்துள்ளார்.சுகாதார முன்முயற்சிக்கான வாக்கெடுப்பின் போது அவரது தொழில்முறை அரசியல் அர்ப்பணிப்பு மிகப்பெரிய அரசியல் உத்வேகத்தையும் வவேற்பையும் அளித்தது.ஃபாரா ரூமி, கிரென்சென் நகரில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமான ரெஸ்டெஸ்பார் கிரென்சென் தலைவராகவும் பணியாற்றுகிறார், இது உணவு வீணாவதைக் குறைக்க உதவுகிறது.அவர் அண்மையில் கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராக மாறியுள்ளார்.அத்துடன் ஃபரா ரூமி, தற்போது சோலோதூர்ன் மாகாணத்தின் மக்கள்தொகையை தேசிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தேசிய பாராளுமன்றின் உறுப்பினராகவும் தெரிவாகியுள்ளார்.இலங்கையில் பிறந்த ரூமி ஆறு வயதாக இருக்கும்போது 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்ஸர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பேண்தகு சுகாதார நலன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தாம் அரசியலில் செயற்பட போவதாக ஃபரா ரூமி கூறியுள்ளார்.