• Dec 17 2024

நாட்டிற்கு திரும்பிய மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்

Chithra / Dec 17th 2024, 8:56 am
image

 

மியான்மரில் செயற்படும் மனித கடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இலங்கையர்கள் நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் எட்டு யுவதிகளும் அடங்கியிருந்த நிலையில் கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மனித கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் சிக்கியிருந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்னும் 14 இலங்கையர்கள் மியான்மரில் செயற்படும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 2024 நவம்பர் 1 முதல் மியான்மரில் உள்ள கடத்தல் முகாம்களில் இருந்து இதுவரை 63 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டிற்கு திரும்பிய மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்  மியான்மரில் செயற்படும் மனித கடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இலங்கையர்கள் நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.இதில் எட்டு யுவதிகளும் அடங்கியிருந்த நிலையில் கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.மனித கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் சிக்கியிருந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இதேவேளை இன்னும் 14 இலங்கையர்கள் மியான்மரில் செயற்படும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக 2024 நவம்பர் 1 முதல் மியான்மரில் உள்ள கடத்தல் முகாம்களில் இருந்து இதுவரை 63 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now