நாளை பிறக்கவுள்ள 2025 புதுவருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் இன்றைய தினம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில்,
மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை மலையக மக்கள் 2024ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கத் தயாராகியுள்ளனர்.
உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதுடன், வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய் ஆகியவற்றின் விலை கடந்த சில மாதங்களின் விலையை விட குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வாழைப்பழத்தின் விலை குறைந்துள்ளதால், அதற்கேற்ப ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை, 150 முதல் - 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஹட்டன் சதொச கிளையில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி மற்றும் சம்பா அரிசி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதுடன் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சதொச கிளையில் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் என சதொச கிளை ஊழியர்கள் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகும் இலங்கை மக்கள் - களைகட்டிய வியாபாரம் நாளை பிறக்கவுள்ள 2025 புதுவருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் இன்றைய தினம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில்,மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை மலையக மக்கள் 2024ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கத் தயாராகியுள்ளனர்.உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதுடன், வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய் ஆகியவற்றின் விலை கடந்த சில மாதங்களின் விலையை விட குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.வாழைப்பழத்தின் விலை குறைந்துள்ளதால், அதற்கேற்ப ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை, 150 முதல் - 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.ஹட்டன் சதொச கிளையில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி மற்றும் சம்பா அரிசி போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதுடன் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சதொச கிளையில் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் என சதொச கிளை ஊழியர்கள் தெரிவித்தனர்.