• Nov 22 2024

வானவேடிக்கை மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்ற இலங்கை மக்கள்..!

Chithra / Jan 1st 2024, 8:31 am
image


புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் நேற்று நள்ளிரவு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வானவேடிக்கையும் நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் நேற்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்குள் வந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டன.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம் உட்பட பல பகுதிகளில் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன்,

பல இடங்களில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது.

இதன்போது நள்ளிரவு 12 மணியளவில் வானவேடிக்கைகள் காட்டப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர். 


வானவேடிக்கை மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்ற இலங்கை மக்கள். புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் நேற்று நள்ளிரவு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வானவேடிக்கையும் நடைபெற்றது.பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் நேற்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்குள் வந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டன.புத்தாண்டை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம் உட்பட பல பகுதிகளில் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன்,பல இடங்களில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததை காணமுடிந்தது.இதன்போது நள்ளிரவு 12 மணியளவில் வானவேடிக்கைகள் காட்டப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement