• Sep 20 2024

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு: முக்கிய நாடுகளின் அறிவிப்பு நாளை!samugammedia

Sharmi / Apr 13th 2023, 9:58 pm
image

Advertisement

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அடுத்த கட்ட திட்டம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை நேரப்படி நாளை  அதிகாலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வருடாந்தம் நடத்தும் பருவகால மாநாட்டினை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கான பிரதான கடன் வழங்குநர்களான ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது திட்டத்தை வெளியிடவுள்ளன.

இந்த கலந்துரையாடலில் ஜப்பான் சார்பில் அந்நாட்டு நிதி அமைச்சர் உள்ளிட்ட இருவர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தியா சார்பில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரான்ஸினை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு திறைசேரி பணிப்பாளர் நாயகம் இம்மானுவேல் மௌலின் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் இந்த விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணையம் ஊடாக இதில் கலந்துகொள்ளவுள்ளதுடன், வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு: முக்கிய நாடுகளின் அறிவிப்பு நாளைsamugammedia இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அடுத்த கட்ட திட்டம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.இலங்கை நேரப்படி நாளை  அதிகாலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வருடாந்தம் நடத்தும் பருவகால மாநாட்டினை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.இலங்கைக்கான பிரதான கடன் வழங்குநர்களான ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது திட்டத்தை வெளியிடவுள்ளன.இந்த கலந்துரையாடலில் ஜப்பான் சார்பில் அந்நாட்டு நிதி அமைச்சர் உள்ளிட்ட இருவர் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்தியா சார்பில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரான்ஸினை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு திறைசேரி பணிப்பாளர் நாயகம் இம்மானுவேல் மௌலின் கலந்துகொள்ளவுள்ளார்.அத்துடன், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் இந்த விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணையம் ஊடாக இதில் கலந்துகொள்ளவுள்ளதுடன், வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement