• Nov 25 2024

இலங்கையில் கோர விபத்து: பிரான்ஸில் இருந்து வந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்..!

Chithra / Mar 4th 2024, 3:56 pm
image

 

தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜைகளான குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தை, பேருந்தில் பயணித்த பெண் துறவி உள்ளிட்டோர்  காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிரே வந்த கார் மீது மோதியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கார் அருகில் இருந்த சிறிய கடையின் உள்ளே புகுந்ததால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பஸ்ஸின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், பஸ்ஸில் பயணித்த சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கையில் கோர விபத்து: பிரான்ஸில் இருந்து வந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்.  தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில், காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜைகளான குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தை, பேருந்தில் பயணித்த பெண் துறவி உள்ளிட்டோர்  காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன.பஸ் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிரே வந்த கார் மீது மோதியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.மேலும், கார் அருகில் இருந்த சிறிய கடையின் உள்ளே புகுந்ததால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.பஸ்ஸின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், பஸ்ஸில் பயணித்த சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement