கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
தங்கத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த இரு பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கட்டுநாயக்கவில் சிக்கிய தங்கம் இந்தியாவில் இருந்து வருகை தந்த இருவர் அதிரடியாக கைது. கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.இதனை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.தங்கத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து வருகை தந்த இரு பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.