நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கின்றபோது மிகவும் சிந்தித்து நிதானித்து மிக பொறுப்புணர்வுடனும் இதயத்திடனும் தமிழினத்தின் தொடர் கொடும் துன்பியலினை துடைத்து இனத்தின் விடிவுக்காகவும் நியாயமிக்க அரசியல் தீர்வுக்காகவும் நீதி நிலைநாட்டப்பட சோரம் போகாதவர்களையும் ஊழல் வன்முறை கொலை கலாச்சார பின்னணியற்றவர்களையும் தெரிவு செய்வதற்கு தங்களது மேலான வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை வாக்காளர்களை வேண்டியுள்ளது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை வாக்காளர்களை தங்கள் அறிக்கையின் மூலம் வேண்டியிருப்பதாவது,,
இலங்கை தேசத்தில் மீண்டுமொரு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுகின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக கடந்த எழுபத்தைந்து வருட வரலாற்றில் எமது மக்களின் வாழ்வியல் பல்வேறுபட்ட அடக்கு முறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் மற்றும் உயிர் உடமை அழிப்புக்களையும் சந்தித்து எதுவித தீர்வுகளையோ பெறாது ஓர் தொடர் கொடும் துன்பியல் வரலாறாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஓர் நாடாளுமன்றத் தேர்தலை தமிழர் தேசம் சந்திக்கின்றது.
பொதுவாகவே தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தாம் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல போலியான கொள்கைகளையும் வெற்று வாக்குறுதிகளையும் மிக கவர்ச்சிகரமான முறையில் அள்ளி வீசி மிக தந்திரமான முறையில் கபட நாடகமாடுவதும் , மதுப்போத்தல்களையும் . பணத்தினையும் கொடுத்தும் சமய சமூக பிரதேசவாத முரண்நிலைகளைத் தூண்டி வன்முறையினையும் , பதட்டநிலையும் உருவாக்கி வாக்குகளை பெற முயற்சிப்பது ஓர் சமூக பேரவலமாகும்.
இவ்வாறான தீமையும் கொடுங்கோன்மையும் நிறைந்த ச10ழலில் நீதி , உண்மை , சமாதானம் , சமத்துவம் , சகோதரத்துவம் , சுதந்திரம் மற்றும் மானிடநேயம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாசாரத்தை உருவாக்குவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுக் கொடுப்பதற்கு இறைவாக்குரைப் பணியாற்றுவதும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையாகிய எமது தலையாய பொறுப்பாகும்.
எனவே இத்தேர்தலில் வாக்களிக்கின்றபோது மிகவும் சிந்தித்து நிதானித்து மிக பொறுப்புணர்வுடனும் இதயத்திடனும் தமிழினத்தின் தொடர் கொடும் துன்பியலினை துடைத்து இனத்தின் விடிவுக்காகவும் நியாயமிக்க அரசியல் தீர்வுக்காகவும் நீதி நிலைநாட்டப்பட அர்ப்பணிப்புடனும் , பதவிக்காகவோ , பணத்துக்காகவோ சுயலாபத்துக்காகவோ சோரம் போகாதவர்களையும் ஊழல் வன்முறை கொலை கலாச்சார பின்னணியற்றவர்களையும் தெரிவு செய்வதற்கு தங்களது மேலான வாக்குரிமையினை பயன்படுத்தி சனநாயக வரலாற்று கடமையினை நிறைவேற்றுமாறு அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றோம் என வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவர் அருள்பணி அ.சாமுவேல் சுபேந்திரன் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு இணைப்பாளர் அருள்பணி கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இனத்தின் விடிவுக்காக சோரம் போகாதவர்களை இனம் கண்டு வாக்களியுங்கள் - இலங்கை மெதடிஸ்த திருமாவட்ட அவை கோரிக்கை நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கின்றபோது மிகவும் சிந்தித்து நிதானித்து மிக பொறுப்புணர்வுடனும் இதயத்திடனும் தமிழினத்தின் தொடர் கொடும் துன்பியலினை துடைத்து இனத்தின் விடிவுக்காகவும் நியாயமிக்க அரசியல் தீர்வுக்காகவும் நீதி நிலைநாட்டப்பட சோரம் போகாதவர்களையும் ஊழல் வன்முறை கொலை கலாச்சார பின்னணியற்றவர்களையும் தெரிவு செய்வதற்கு தங்களது மேலான வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை வாக்காளர்களை வேண்டியுள்ளது.இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை வாக்காளர்களை தங்கள் அறிக்கையின் மூலம் வேண்டியிருப்பதாவது,,இலங்கை தேசத்தில் மீண்டுமொரு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுகின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக கடந்த எழுபத்தைந்து வருட வரலாற்றில் எமது மக்களின் வாழ்வியல் பல்வேறுபட்ட அடக்கு முறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் மற்றும் உயிர் உடமை அழிப்புக்களையும் சந்தித்து எதுவித தீர்வுகளையோ பெறாது ஓர் தொடர் கொடும் துன்பியல் வரலாறாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஓர் நாடாளுமன்றத் தேர்தலை தமிழர் தேசம் சந்திக்கின்றது.பொதுவாகவே தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தாம் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல போலியான கொள்கைகளையும் வெற்று வாக்குறுதிகளையும் மிக கவர்ச்சிகரமான முறையில் அள்ளி வீசி மிக தந்திரமான முறையில் கபட நாடகமாடுவதும் , மதுப்போத்தல்களையும் . பணத்தினையும் கொடுத்தும் சமய சமூக பிரதேசவாத முரண்நிலைகளைத் தூண்டி வன்முறையினையும் , பதட்டநிலையும் உருவாக்கி வாக்குகளை பெற முயற்சிப்பது ஓர் சமூக பேரவலமாகும்.இவ்வாறான தீமையும் கொடுங்கோன்மையும் நிறைந்த ச10ழலில் நீதி , உண்மை , சமாதானம் , சமத்துவம் , சகோதரத்துவம் , சுதந்திரம் மற்றும் மானிடநேயம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாசாரத்தை உருவாக்குவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுக் கொடுப்பதற்கு இறைவாக்குரைப் பணியாற்றுவதும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையாகிய எமது தலையாய பொறுப்பாகும்.எனவே இத்தேர்தலில் வாக்களிக்கின்றபோது மிகவும் சிந்தித்து நிதானித்து மிக பொறுப்புணர்வுடனும் இதயத்திடனும் தமிழினத்தின் தொடர் கொடும் துன்பியலினை துடைத்து இனத்தின் விடிவுக்காகவும் நியாயமிக்க அரசியல் தீர்வுக்காகவும் நீதி நிலைநாட்டப்பட அர்ப்பணிப்புடனும் , பதவிக்காகவோ , பணத்துக்காகவோ சுயலாபத்துக்காகவோ சோரம் போகாதவர்களையும் ஊழல் வன்முறை கொலை கலாச்சார பின்னணியற்றவர்களையும் தெரிவு செய்வதற்கு தங்களது மேலான வாக்குரிமையினை பயன்படுத்தி சனநாயக வரலாற்று கடமையினை நிறைவேற்றுமாறு அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றோம் என வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவர் அருள்பணி அ.சாமுவேல் சுபேந்திரன் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு இணைப்பாளர் அருள்பணி கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.