• Oct 26 2024

இலங்கையின் இணையவழி விசா மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Tamil nila / Oct 26th 2024, 8:40 am
image

Advertisement

தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தென் கொரியாவில் குறுகிய கால வேலைக்காக  E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை அனுப்புவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கை தென்கொரிய அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் பணிபுரிய தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதுடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை.  E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறி பல்வேறு நபர்கள் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை தனியார் துறைக்கு அனுப்ப முடியாது என்றும் தென் கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைக்குச் செல்வதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் எனவே, E-8 விசா னபிரிவின் கீழ் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

எனவே பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளது.

இலங்கையின் இணையவழி விசா மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.கடந்த காலங்களில் தென் கொரியாவில் குறுகிய கால வேலைக்காக  E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை அனுப்புவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கை தென்கொரிய அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது.இந்த E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் பணிபுரிய தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதுடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை.  E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறி பல்வேறு நபர்கள் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை தனியார் துறைக்கு அனுப்ப முடியாது என்றும் தென் கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த வேலைக்குச் செல்வதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் எனவே, E-8 விசா னபிரிவின் கீழ் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.எனவே பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement