• May 16 2024

இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை..!

Chithra / Apr 29th 2024, 9:20 am
image

Advertisement


இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.

தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில்  4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.

2022ல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023ல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை. இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில்  4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.2022ல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023ல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement