• May 10 2026

தரமற்ற உருக்கு கம்பி உற்பத்தி: ஹோமாகம தொழிற்சாலைக்கு முத்திரை

Chithra / May 10th 2026, 4:54 pm
image

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த தொழிற்சாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டு மூடியுள்ளது.

 

ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலை, கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கிடைத்த தகவலின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (09) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.


இதன்போது, சுமார் மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையில், ஏனைய உற்பத்திகளுடன் இணைந்து 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.


மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி இந்த இரும்புக்கம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

தரமற்ற உருக்கு கம்பி உற்பத்தி: ஹோமாகம தொழிற்சாலைக்கு முத்திரை தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த தொழிற்சாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டு மூடியுள்ளது. ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலை, கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிடைத்த தகவலின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (09) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதன்போது, சுமார் மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையில், ஏனைய உற்பத்திகளுடன் இணைந்து 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி இந்த இரும்புக்கம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement