• Sep 25 2024

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

Chithra / Sep 25th 2024, 9:31 am
image

Advertisement


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் ஆராய்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய தேசிய கட்சி நேற்று முன்வைத்தது. 

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.  

ஒன்றாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் ஆராய்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய தேசிய கட்சி நேற்று முன்வைத்தது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.  ஒன்றாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement