• Nov 28 2024

ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Chithra / Jun 7th 2024, 11:38 am
image

 

இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு,

இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது.

இதேவேளை இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்  தெரிவித்துள்ளார்.


ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.  இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.அத்துடன் மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு,இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது.இதேவேளை இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement