• Nov 28 2024

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர்..! ராகம வைத்தியசாலையில் குவியும் அரசியல்வாதிகள்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Chithra / Jan 25th 2024, 9:28 am
image

 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அவரை பார்வையிட  அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஜெயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள்,உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக ராகம போதனா வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     


விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர். ராகம வைத்தியசாலையில் குவியும் அரசியல்வாதிகள் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு  கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அவரை பார்வையிட  அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில்  படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் ஜெயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள்,உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.இதன் காரணமாக ராகம போதனா வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     

Advertisement

Advertisement

Advertisement