• Nov 26 2024

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Chithra / May 17th 2024, 3:44 pm
image

  

நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கலந்துரையாடல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைமை அல்லது புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட முறையில் நடத்தலாம் என ஆணைக்குழு பிரதமரிடம் சுட்டிக்காட்டியது.

அதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், அது

நாடாமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,

இதற்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை துரிதமாக நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு   நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த கலந்துரையாடல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைமை அல்லது புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட முறையில் நடத்தலாம் என ஆணைக்குழு பிரதமரிடம் சுட்டிக்காட்டியது.அதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், அதுநாடாமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,இதற்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை துரிதமாக நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement