• Mar 04 2025

கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு..!

Sharmi / Mar 4th 2025, 10:10 am
image

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரநாயக்க, சுனந்த கலையரங்கில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற மகளிர் பேரவை உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். இப்போது நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும்.

அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதற்கான பணிகளை நாம் தொடங்கியுள்ளோம். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களான நீங்களும் முன்வர வேண்டும். எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுத பெண்கள் ஒன்றுசேர்ந்து முன்வந்தனர். எதிர்காலத்தில் எழுதப்படும் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத, பெண்களாகிய நீங்கள் தலைவர்களாக முன்வந்து செயற்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Clean Sri Lanka திட்டத்தின் நோக்கம் சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. நாம் சிந்திக்கும் விதமும் செயற்படும் விதமும் தூய்மையானதாக மாற வேண்டும். ஆன்மீக ரீதியிலும் மனப்பான்மையிலும் நாம் மாற வேண்டும்.

உங்களில் இருந்து தொடங்கி உங்கள் வீடு, கிராமம், வேலை செய்யும் இடம் என்று இந்த மாற்றம் நிகழ வேண்டும். நாட்டை மாற்றும் பயணத்தில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இன்று பாராளுமன்றத்தில் நாங்கள் பார்க்கிறோம். எதிர்கட்சிகள் எம்மை விட மார்க்சியவாதிகளாக மாறி எங்களை விட லெனினை பற்றி அதிகம் வாசித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஜனநாயகத்தின் அடிப்படையில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் துறைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் பொருளாதார முகாமைத்துவத்தில் ஈடுபட வேண்டும் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களாக அதிகரிக்கப்படாவிட்டாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அரசு ஊழியர்கள் தங்களின் சேவையை மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும். அரச சேவை கவர்ச்சியான சேவையாக மாற வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் இலங்கையில் தற்போது கிடைக்கும் மிக உயர்ந்த சம்பள தர வரிசைகளுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வித் துறையை முன்னேற்றவேண்டுமானால், பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் அறிவிலும் ஆன்மீகத்திலும் வலுவாக இருக்க வேண்டும். மக்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தரத்தை உயர்த்தவே இதையெல்லாம் செய்து வருகிறோம்.

அரசியல் சார்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இன்று அரசியல்வாதிகளிடமிருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை.

பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர் பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்.

விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும், நவீன அறிவையும் விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் திட்டமிட்டுவருகிறோம்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 2026 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார மற்றும் அரநாயக்க பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.




கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு. புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.அரநாயக்க, சுனந்த கலையரங்கில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற மகளிர் பேரவை உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். இப்போது நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதற்கான பணிகளை நாம் தொடங்கியுள்ளோம். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களான நீங்களும் முன்வர வேண்டும். எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுத பெண்கள் ஒன்றுசேர்ந்து முன்வந்தனர். எதிர்காலத்தில் எழுதப்படும் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத, பெண்களாகிய நீங்கள் தலைவர்களாக முன்வந்து செயற்பட வேண்டும்.அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Clean Sri Lanka திட்டத்தின் நோக்கம் சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. நாம் சிந்திக்கும் விதமும் செயற்படும் விதமும் தூய்மையானதாக மாற வேண்டும். ஆன்மீக ரீதியிலும் மனப்பான்மையிலும் நாம் மாற வேண்டும்.உங்களில் இருந்து தொடங்கி உங்கள் வீடு, கிராமம், வேலை செய்யும் இடம் என்று இந்த மாற்றம் நிகழ வேண்டும். நாட்டை மாற்றும் பயணத்தில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்.இன்று பாராளுமன்றத்தில் நாங்கள் பார்க்கிறோம். எதிர்கட்சிகள் எம்மை விட மார்க்சியவாதிகளாக மாறி எங்களை விட லெனினை பற்றி அதிகம் வாசித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஜனநாயகத்தின் அடிப்படையில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் துறைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் பொருளாதார முகாமைத்துவத்தில் ஈடுபட வேண்டும் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களாக அதிகரிக்கப்படாவிட்டாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அரசு ஊழியர்கள் தங்களின் சேவையை மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும். அரச சேவை கவர்ச்சியான சேவையாக மாற வேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் இலங்கையில் தற்போது கிடைக்கும் மிக உயர்ந்த சம்பள தர வரிசைகளுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வித் துறையை முன்னேற்றவேண்டுமானால், பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் அறிவிலும் ஆன்மீகத்திலும் வலுவாக இருக்க வேண்டும். மக்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தரத்தை உயர்த்தவே இதையெல்லாம் செய்து வருகிறோம்.அரசியல் சார்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இன்று அரசியல்வாதிகளிடமிருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை.பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர் பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்.விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும், நவீன அறிவையும் விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் திட்டமிட்டுவருகிறோம்.நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 2026 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார மற்றும் அரநாயக்க பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement