• May 22 2026

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அபாய வலயத்தில் பல மாவட்டங்கள்! அவசர எச்சரிக்கை

Chithra / May 22nd 2026, 7:45 am
image

தற்போது கனமழை நிலவுவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 06  மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய  எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், 


கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, அயகம மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்கும் மூன்றாம் நிலைக்குரிய, மண்சரிவு அதிஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.


இந்தநிலையில் மண்சரிவு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை  பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


நேற்று (21) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 


இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இதேவேளை வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.


புத்தளம் – கொழும்பு பிரதான வீதி தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், “குதிரைக் கோவில்” பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 


இந்நிலையில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும். 


காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 


வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அபாய வலயத்தில் பல மாவட்டங்கள் அவசர எச்சரிக்கை தற்போது கனமழை நிலவுவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 06  மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய  எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, அயகம மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்கும் மூன்றாம் நிலைக்குரிய, மண்சரிவு அதிஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.இந்தநிலையில் மண்சரிவு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை  பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (21) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.புத்தளம் – கொழும்பு பிரதான வீதி தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், “குதிரைக் கோவில்” பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement