• Nov 07 2025

உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை

Chithra / Oct 10th 2025, 9:34 am
image

 

உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். 

உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க, எவருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். 

இந்த நிலையில் தவறான செய்தியைப் பரப்பியவர்கள் மற்றும் செய்திகளை வழங்கியவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். 

ஈஸ்டர் தாக்குதல்  இந்தியாவின் தேவைக்காக நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னணியில் செயற்பட்டது இந்தியா என செயலாளர் ரவி செனவிரத்ன குழுவில் ஒருபோதும் கூறவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கூறினார். 

இது தமது அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை  உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க, எவருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த நிலையில் தவறான செய்தியைப் பரப்பியவர்கள் மற்றும் செய்திகளை வழங்கியவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்  இந்தியாவின் தேவைக்காக நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னணியில் செயற்பட்டது இந்தியா என செயலாளர் ரவி செனவிரத்ன குழுவில் ஒருபோதும் கூறவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கூறினார். இது தமது அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement