தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறைத் தேர்தலிலும் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்தல் ஆணைக்குழுவினால் இது குறித்த சுற்று நிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அரச அதிகாரிகள் தமது சேவை நேரத்தில் வேட்பாளர்கள் தொடர்பான பிரசாரங்களை முன்னெடுப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
அதேபோன்று ஏதேனும் அரச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் போது அவை எந்தவகையிலும் எந்தவொரு வேட்பாளருக்குமான பிரசாரமாக அமைந்து விடக் கூடாது.
மேலும் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதிலும் வரையறைகள் காணப்படுகின்றன. அரச தேவைகளுக்கு மாத்திரமே அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
மாறாக தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி குறித்த வாகனத்துக்கு உரித்துடையவர்களே அதற்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
தேர்தலுக்கான அலுவலகங்களை அமைப்பதற்கு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மத வழிபாட்டு தலங்களிலோ அரச கட்டடங்களிலோ அவற்றை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த அலுவலகங்கள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்பட்டால் கடும் நடவடிக்கை - பெப்ரல் எச்சரிக்கை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறைத் தேர்தலிலும் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தேர்தல் ஆணைக்குழுவினால் இது குறித்த சுற்று நிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய அரச அதிகாரிகள் தமது சேவை நேரத்தில் வேட்பாளர்கள் தொடர்பான பிரசாரங்களை முன்னெடுப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.அதேபோன்று ஏதேனும் அரச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் போது அவை எந்தவகையிலும் எந்தவொரு வேட்பாளருக்குமான பிரசாரமாக அமைந்து விடக் கூடாது.மேலும் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதிலும் வரையறைகள் காணப்படுகின்றன. அரச தேவைகளுக்கு மாத்திரமே அவை பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி குறித்த வாகனத்துக்கு உரித்துடையவர்களே அதற்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.தேர்தலுக்கான அலுவலகங்களை அமைப்பதற்கு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மத வழிபாட்டு தலங்களிலோ அரச கட்டடங்களிலோ அவற்றை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த அலுவலகங்கள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.