இலங்கையில் பொருளாதார மீளெழுச்சி வேகமடைந்து வருகின்றபோதும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவியை 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.
அத்துடன் இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வருமானத்துக்கான சூழல் மேம்பட்டு வருகிறது, வெளிநாட்டுக் கையிருப்பும் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2024 இல் 5 சதவீதத்தை எட்டியது,
மேலும் இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 5 சதவீதத்தை எட்டியமையும் முக்கியமான விடயமாகும்.
இவ்வாறாக நேர்மறையான நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.
எனவே பாரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்தச் செயற்பாடுகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் - எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் பொருளாதார மீளெழுச்சி வேகமடைந்து வருகின்றபோதும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவியை 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.அத்துடன் இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வருமானத்துக்கான சூழல் மேம்பட்டு வருகிறது, வெளிநாட்டுக் கையிருப்பும் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2024 இல் 5 சதவீதத்தை எட்டியது,மேலும் இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 5 சதவீதத்தை எட்டியமையும் முக்கியமான விடயமாகும்.இவ்வாறாக நேர்மறையான நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. எனவே பாரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்தச் செயற்பாடுகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.