• Mar 14 2026

போதையை தடுக்க கடுமையான சட்டங்கள்; சந்தேநபர்கள் தப்பிக்க முடியாது! பாதுகாப்புப் பிரதி அமைச்சர் எச்சரிக்கை

Chithra / Mar 13th 2026, 12:19 pm
image

 

சர்வதேசக் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக  அண்மையில் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கமும் போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அதன் வலையமைப்பையும் ஒழிப்பதாக உறுதிபூண்டுள்ளது. 

ஆகையினால் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தப்பிச் செல்வதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்க போவதில்லை, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர எச்சரித்துள்ளார்.

கடற்படையினரால் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் நேற்று மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பொறுப்புமிக்க வேலைத்திட்டத்துக்கமைய மேற்படி போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 

கடற்படையின் நீண்டதூர ரோந்துப் பிரிவு, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வுச் சேவைகள் என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து, பல நாட்களாகக் கடலில் முன்னெடுத்த மிக நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் பிரதிபலனாகப் போதைப்பொருளுடன்  குறித்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 8ஆம் திகதி கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கடற்படையினரால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில், சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைக்கப்பட்டன.

இந்த ஆழ்கடல் கைது நடவடிக்கையில் 600 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ரி-56 மற்றும் எம்-16 ரக நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட 11 துப்பாக்கிகள் மற்றும் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைபேசிகளுடன் 10 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டு வந்து, நாட்டில் நிலவும் அமைதியான சூழலைச் சீர்குலைத்து, தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும்  பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை நிலைகுலையச் செய்வதே இந்தக் கும்பல்களின் பிரதான நோக்கமாகும். 

போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுத வியாபாரம் என்பன ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களாகும். இவை நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கறுப்புப் பணச் சுத்திகரிப்புடனும் நேரடியாகத் தொடர்புடையவை.

முப்படையினரும் பொலிஸாரும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேசக் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான கடத்தல்களைத் தடுக்க அண்மையில் பாராளுமன்றத்தின் ஊடாக மிகக் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கிய சட்டமூலங்களையும் நாம் நிறைவேற்றிக் கொண்டுள்ளோம். 

மேலும் தற்போதைய அரசாங்கம் இவ்வாறான போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அதன் வலையமைப்பையும் ஒழிப்பதாக உறுதிபூண்டுள்ளது. 

ஆகையால் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தப்பிச் செல்வதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கப் போவதில்லை, ஆகையால் இதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு எச்சரிக்கின்றேன்.

அதேபோன்று, எமது எதிர்கால சந்ததியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உண்டு. இவ்வாறான சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து தகவல்களை வழங்குமாறு கோருகிறேன். 

நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரையும் இளைஞர் சமூகத்தையும் இந்த போதைப்பொருளிலிருந்து மீட்டெடுப்போம் என நாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார்.

போதையை தடுக்க கடுமையான சட்டங்கள்; சந்தேநபர்கள் தப்பிக்க முடியாது பாதுகாப்புப் பிரதி அமைச்சர் எச்சரிக்கை  சர்வதேசக் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக  அண்மையில் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கமும் போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அதன் வலையமைப்பையும் ஒழிப்பதாக உறுதிபூண்டுள்ளது. ஆகையினால் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தப்பிச் செல்வதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்க போவதில்லை, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர எச்சரித்துள்ளார்.கடற்படையினரால் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் நேற்று மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள பொறுப்புமிக்க வேலைத்திட்டத்துக்கமைய மேற்படி போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீண்டதூர ரோந்துப் பிரிவு, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வுச் சேவைகள் என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து, பல நாட்களாகக் கடலில் முன்னெடுத்த மிக நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் பிரதிபலனாகப் போதைப்பொருளுடன்  குறித்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த 8ஆம் திகதி கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கடற்படையினரால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில், சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைக்கப்பட்டன.இந்த ஆழ்கடல் கைது நடவடிக்கையில் 600 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ரி-56 மற்றும் எம்-16 ரக நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட 11 துப்பாக்கிகள் மற்றும் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைபேசிகளுடன் 10 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டு வந்து, நாட்டில் நிலவும் அமைதியான சூழலைச் சீர்குலைத்து, தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும்  பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை நிலைகுலையச் செய்வதே இந்தக் கும்பல்களின் பிரதான நோக்கமாகும். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுத வியாபாரம் என்பன ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களாகும். இவை நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கறுப்புப் பணச் சுத்திகரிப்புடனும் நேரடியாகத் தொடர்புடையவை.முப்படையினரும் பொலிஸாரும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேசக் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான கடத்தல்களைத் தடுக்க அண்மையில் பாராளுமன்றத்தின் ஊடாக மிகக் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கிய சட்டமூலங்களையும் நாம் நிறைவேற்றிக் கொண்டுள்ளோம். மேலும் தற்போதைய அரசாங்கம் இவ்வாறான போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அதன் வலையமைப்பையும் ஒழிப்பதாக உறுதிபூண்டுள்ளது. ஆகையால் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தப்பிச் செல்வதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கப் போவதில்லை, ஆகையால் இதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு எச்சரிக்கின்றேன்.அதேபோன்று, எமது எதிர்கால சந்ததியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உண்டு. இவ்வாறான சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து தகவல்களை வழங்குமாறு கோருகிறேன். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரையும் இளைஞர் சமூகத்தையும் இந்த போதைப்பொருளிலிருந்து மீட்டெடுப்போம் என நாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement