• Apr 07 2025

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் போராட்டம்..! அரசுக்கு எச்சரிக்கை

Chithra / May 19th 2024, 8:01 am
image

 

எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் கடுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்தில் 20ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் 21ஆம் திகதியும் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுகாதார அமைச்சும் நிதி அமைச்சும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்து அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியதில் 15க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நீக்கப்பட்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் போராட்டம். அரசுக்கு எச்சரிக்கை  எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் கடுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.அத்துடன் ஊவா மாகாணத்தில் 20ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் 21ஆம் திகதியும் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்மேலும் ஏப்ரல் 03ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுகாதார அமைச்சும் நிதி அமைச்சும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்து அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியதில் 15க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நீக்கப்பட்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now