• Nov 23 2024

சஜித் மற்றும் அனுரவுக்கு வலுக்கும் ஆதரவு; விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க மொட்டு கட்சி திட்டம்

Chithra / Mar 27th 2024, 9:17 am
image

 

மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன. ஆகவே பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது   என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோல்வி அடைந்து முழு நாட்டையும் பழிகொடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.

மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த செல்வாக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் அளவுக்கு உயர்வடையாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமாக இருந்தவர்கள் பல்வேறு காரணிகளினால் இன்று விலகிச் செயற்படுகிறார்கள்.

இவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் சகல உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன்.- என்றார்.

சஜித் மற்றும் அனுரவுக்கு வலுக்கும் ஆதரவு; விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க மொட்டு கட்சி திட்டம்  மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன. ஆகவே பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது   என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோல்வி அடைந்து முழு நாட்டையும் பழிகொடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.தற்போதைய அரசியல் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த செல்வாக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் அளவுக்கு உயர்வடையாது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமாக இருந்தவர்கள் பல்வேறு காரணிகளினால் இன்று விலகிச் செயற்படுகிறார்கள்.இவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் சகல உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement