வடமத்திய, வடமேற்கு, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்போது சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் காயங்களைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கம்பியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கடும் மின்னல் தாக்கம்; பல பகுதிகளுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை வடமத்திய, வடமேற்கு, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (14) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்போது சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் காயங்களைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கம்பியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அவசர நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.