• Jun 01 2026

மாணவி அம்சிகா மரணம்; ஒரு வருடமாகியும் நீதி கிடைக்கவில்லை! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Chithra / May 31st 2026, 2:09 pm
image

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். 


கொழும்பில் இன்று  நடைபெற்ற அவசர ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார். இந்த ஊடக சந்திப்பில் உயிரிழந்த மாணவியின் தாய், தந்தை மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 11 ஆம் ஆண்டு மாணவியான தில்சி அம்சிகா விசித்திரமான முறையில் மரணமடைந்தார். 


இந்தச் சோகமான சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிய போதிலும், மரணத்திற்கான உண்மையான காரணங்களோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கான தண்டனையோ இன்னும் வழங்கப்படவில்லை என அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர். 


இந்தச் சம்பவம் நடந்த ஆரம்ப காலப்பகுதியில் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, கடந்த 2025 மே மாதம் 9 ஆம் தேதி பிரதமரின் அலுவலகத்தில் ஒரு முக்கிய கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்த உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் மூலமும், நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக முத்துகல தலைமையிலான குழு ஒன்றின் மூலமும் விசாரணைகள் நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. 


ஆனால், அந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஜோசப் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டினார். 


இந்த மரணம் தொடர்பான வழக்கு தற்போது கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிவான் நீதிமன்றத்தில் இரு வேறு வழக்குகளாக நிலுவையில் உள்ளது. எனினும், பொலிஸார் தரப்பிலிருந்து உரிய நேரத்தில் மற்றும் முறையான வழிகளில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாததே இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிப்பதற்குக் காரணம் என   குற்றம் சாட்டப்பட்டது. 


குறிப்பாக, நீதிமன்றத்தில் பொலிஸார் தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் திட்டமிட்ட குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


இவ்வழக்கில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னின்று செயல்பட்டு வரும் வேளையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு பிரத்தியேக வகுப்பு  உரிமையாளர் அல்லது உறுப்பினர் ஒருவர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. 


எனினும், அவர் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசியல் கட்சியில் போட்டியிட்டவர் என்ற பின்னணியைக் கொண்டிருப்பதால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகத்தை ஆசிரியர் சங்கமும், பெற்றோரும் எழுப்பியுள்ளனர். 


தில்சி அம்சிகாவின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2025 ஜூலை 30 ஆம் தேதி ஓமாகம மஹிந்த ராஜபக்ச பாடசாலையிலும் ஆசிரியர்களின் கடுமையான அழுத்தம் காரணமாக பிறிதொரு மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்தும் கல்வி அமைச்சு நடத்திய விசாரணைகளின் தீர்ப்புகள் இதுவரை அமல்படுத்தப்படாமல் காலம்கடத்தப்பட்டு வருகின்றன.


இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் எந்தவொரு பிள்ளைக்கும் தொடராமல் இருக்க வேண்டுமாயின், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 


கல்வி அமைச்சும் அரசாங்கமும் எடுக்கும் முடிவுகளைத் தொடர்ந்து பின்போடுவார்களாயின், சாதாரண பொதுமக்கள் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள், இழுத்தடிக்கப்படும் இந்த வழக்குகளுக்கு அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என இம்மாணவியின் பெற்றோர் சார்பாகப் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவி அம்சிகா மரணம்; ஒரு வருடமாகியும் நீதி கிடைக்கவில்லை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று  நடைபெற்ற அவசர ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார். இந்த ஊடக சந்திப்பில் உயிரிழந்த மாணவியின் தாய், தந்தை மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 11 ஆம் ஆண்டு மாணவியான தில்சி அம்சிகா விசித்திரமான முறையில் மரணமடைந்தார். இந்தச் சோகமான சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிய போதிலும், மரணத்திற்கான உண்மையான காரணங்களோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கான தண்டனையோ இன்னும் வழங்கப்படவில்லை என அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நடந்த ஆரம்ப காலப்பகுதியில் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, கடந்த 2025 மே மாதம் 9 ஆம் தேதி பிரதமரின் அலுவலகத்தில் ஒரு முக்கிய கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்த உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் மூலமும், நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக முத்துகல தலைமையிலான குழு ஒன்றின் மூலமும் விசாரணைகள் நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஜோசப் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்த மரணம் தொடர்பான வழக்கு தற்போது கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிவான் நீதிமன்றத்தில் இரு வேறு வழக்குகளாக நிலுவையில் உள்ளது. எனினும், பொலிஸார் தரப்பிலிருந்து உரிய நேரத்தில் மற்றும் முறையான வழிகளில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாததே இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிப்பதற்குக் காரணம் என   குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, நீதிமன்றத்தில் பொலிஸார் தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் திட்டமிட்ட குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.இவ்வழக்கில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னின்று செயல்பட்டு வரும் வேளையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு பிரத்தியேக வகுப்பு  உரிமையாளர் அல்லது உறுப்பினர் ஒருவர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எனினும், அவர் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசியல் கட்சியில் போட்டியிட்டவர் என்ற பின்னணியைக் கொண்டிருப்பதால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகத்தை ஆசிரியர் சங்கமும், பெற்றோரும் எழுப்பியுள்ளனர். தில்சி அம்சிகாவின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2025 ஜூலை 30 ஆம் தேதி ஓமாகம மஹிந்த ராஜபக்ச பாடசாலையிலும் ஆசிரியர்களின் கடுமையான அழுத்தம் காரணமாக பிறிதொரு மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்தும் கல்வி அமைச்சு நடத்திய விசாரணைகளின் தீர்ப்புகள் இதுவரை அமல்படுத்தப்படாமல் காலம்கடத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் எந்தவொரு பிள்ளைக்கும் தொடராமல் இருக்க வேண்டுமாயின், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சும் அரசாங்கமும் எடுக்கும் முடிவுகளைத் தொடர்ந்து பின்போடுவார்களாயின், சாதாரண பொதுமக்கள் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள், இழுத்தடிக்கப்படும் இந்த வழக்குகளுக்கு அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என இம்மாணவியின் பெற்றோர் சார்பாகப் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement