• Apr 30 2026

தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்!

Ziya / Apr 30th 2026, 3:22 pm
image

மாணவர்களிடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று (30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலை அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார்  தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.


396 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 87 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதிலிருந்து அறுபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 


இத்தேர்தலின் ஊடாகத் 60 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதில் 05 பேர் நிறைவேற்று உறுப்பினர்களாகவும் 

10 பேர் அமைச்சர்களாகவும்

 ஏனையவர்கள் சபை உறுப்பினர்களாகச் செயற்படுவர்.


"வருங்கால சந்ததியினருக்கு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரடி அனுபவத்தை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்." என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்தத் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, மிகுந்த ஒழுக்கத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் மாணவர்களிடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று (30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.பாடசாலை அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார்  தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.396 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 87 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதிலிருந்து அறுபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலின் ஊடாகத் 60 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதில் 05 பேர் நிறைவேற்று உறுப்பினர்களாகவும் 10 பேர் அமைச்சர்களாகவும் ஏனையவர்கள் சபை உறுப்பினர்களாகச் செயற்படுவர்."வருங்கால சந்ததியினருக்கு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரடி அனுபவத்தை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்." என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தத் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, மிகுந்த ஒழுக்கத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement