மஸ்கெலியா - மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள குறுக்கு வீதியை மூடியதால் பாடசாலை மாணவர்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியுள்ளது. 10 நிமிடத்தில் செல்லும் 1500 மீற்றர் தூரத்தை இரண்டு கிலோ மீற்றர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது.
ராஜமலை பிரிவில் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரே இந்த குறுக்கு வீதியை மூடி படிக்கட்டு அமைத்துள்ளார். அத்துடன் படிகளுக்கு முன்னாள் கற்குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தரம் ஒன்று முதல் 13 வரை நல்லதண்ணி, மஸ்கெலியா, கொட்டகலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தற்போது தோட்ட நிர்வாகிகள் வழங்கியுள்ள படிகளில் இறங்கி ஏறி செல்ல முடியாதுள்ளது.
அந்த படி கட்டுகள் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளது. அத்துடன் ஏறி இறங்கி செல்ல முடியாது உள்ளது என பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக இருந்து போல குறுக்கு வீதியில் புதிதாக அமைத்துள்ள படி கட்டுகளை அகற்றும் படியும் அந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் செப்பனிட தேவை இல்லை. அந்த வீதியை தாமாகவே முன்வந்து சிரமதானம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இரண்டு கிலோமீற்றர் சுற்றி வரும் பட்சத்தில் இடைநடுவில் சிறு சிறு காடுகளும் உள்ளன. இந்த பகுதியில் பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 8 பேர் உள்ளனர்.
இவர்களில் பாதுகாப்புப் பற்றி தோட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்துவது டன் ஏனைய மாணவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்க அதிகாலை 5.45 புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மறே தோட்ட ராஜமலை பிரிவு சிவனடி பாதமலை வனத் தொடரில் சிவனடி பாத மலை உச்சி பகுதியில் அமைந்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி மக்களின் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா பகுதியில் குறுக்கு வீதியை மூடியதால் மாணவர்கள், முதியோர்கள் சிரமம் மஸ்கெலியா - மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள குறுக்கு வீதியை மூடியதால் பாடசாலை மாணவர்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியுள்ளது. 10 நிமிடத்தில் செல்லும் 1500 மீற்றர் தூரத்தை இரண்டு கிலோ மீற்றர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. ராஜமலை பிரிவில் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரே இந்த குறுக்கு வீதியை மூடி படிக்கட்டு அமைத்துள்ளார். அத்துடன் படிகளுக்கு முன்னாள் கற்குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தரம் ஒன்று முதல் 13 வரை நல்லதண்ணி, மஸ்கெலியா, கொட்டகலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தற்போது தோட்ட நிர்வாகிகள் வழங்கியுள்ள படிகளில் இறங்கி ஏறி செல்ல முடியாதுள்ளது. அந்த படி கட்டுகள் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளது. அத்துடன் ஏறி இறங்கி செல்ல முடியாது உள்ளது என பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.கடந்த பல ஆண்டுகளாக இருந்து போல குறுக்கு வீதியில் புதிதாக அமைத்துள்ள படி கட்டுகளை அகற்றும் படியும் அந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் செப்பனிட தேவை இல்லை. அந்த வீதியை தாமாகவே முன்வந்து சிரமதானம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். இரண்டு கிலோமீற்றர் சுற்றி வரும் பட்சத்தில் இடைநடுவில் சிறு சிறு காடுகளும் உள்ளன. இந்த பகுதியில் பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 8 பேர் உள்ளனர். இவர்களில் பாதுகாப்புப் பற்றி தோட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்துவது டன் ஏனைய மாணவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்க அதிகாலை 5.45 புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மறே தோட்ட ராஜமலை பிரிவு சிவனடி பாதமலை வனத் தொடரில் சிவனடி பாத மலை உச்சி பகுதியில் அமைந்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி மக்களின் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.