• Sep 20 2024

மாணவியின் மர்ம மரணம்: பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்கள்! samugammedia

Chithra / May 15th 2023, 12:15 pm
image

Advertisement


களுத்துறையில்  மாடி கட்டடம் ஒன்றிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி  தவறி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதிவான் நீதிமன்றத்துக்கு  அழைத்து வரப்பட்டனர்.

மாணவியை  விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இளம் தம்பதி, ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதியாக இருந்த நபர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, உயிரிழந்த மாணவியின் தாயார் உட்பட   நூற்றுக்கு மேற்பட்டோர் களுத்துறை  நீதிமன்றத்துக்கு  வெளியே நின்று மாணவிக்கு நீதிகோரி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், பொலிஸார் உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு  மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாணவியின் மர்ம மரணம்: பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்கள் samugammedia களுத்துறையில்  மாடி கட்டடம் ஒன்றிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி  தவறி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நால்வரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதிவான் நீதிமன்றத்துக்கு  அழைத்து வரப்பட்டனர்.மாணவியை  விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இளம் தம்பதி, ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதியாக இருந்த நபர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, உயிரிழந்த மாணவியின் தாயார் உட்பட   நூற்றுக்கு மேற்பட்டோர் களுத்துறை  நீதிமன்றத்துக்கு  வெளியே நின்று மாணவிக்கு நீதிகோரி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், பொலிஸார் உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு  மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement