• Sep 19 2024

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

Tamil nila / Dec 1st 2022, 9:24 pm
image

Advertisement

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சுகாதார மற்றும் உடற்கல்வி பாடத்தை பயில்விக்கும் அம்லக் ஆசிரியரை மாற்றவேண்டாமெனவும் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 


சுமார் 100ற்கும் அதிகமான மாணவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷஙல்ங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பிரித்தியோக செயலாளர் டொக்டர். ஜவ்சீக் வருகைத் தந்து ஆசிரியர் மாற்றம் தொடர்பாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனை அதிகாரியிடம் அறிவித்து உள்ளதாக தெரிவித்த நிலையில், இடம்மாற்றம் தொடர்பாக வருகின்ற திங்கட் கிழமை புத்தளம் வலயக் கல்விப் பணிமனை அதிகாரியுடன் கலந்துரையாட உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.


பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட நிலையில் பாடசாலைக்குள் சென்றனர்.


புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.சுகாதார மற்றும் உடற்கல்வி பாடத்தை பயில்விக்கும் அம்லக் ஆசிரியரை மாற்றவேண்டாமெனவும் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100ற்கும் அதிகமான மாணவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷஙல்ங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பிரித்தியோக செயலாளர் டொக்டர். ஜவ்சீக் வருகைத் தந்து ஆசிரியர் மாற்றம் தொடர்பாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனை அதிகாரியிடம் அறிவித்து உள்ளதாக தெரிவித்த நிலையில், இடம்மாற்றம் தொடர்பாக வருகின்ற திங்கட் கிழமை புத்தளம் வலயக் கல்விப் பணிமனை அதிகாரியுடன் கலந்துரையாட உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட நிலையில் பாடசாலைக்குள் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement