• Jul 31 2026

போதைப்பொருளுடன் தெஹிவளை உப பொலிஸ் பரிசோதகர் கைது

Chithra / Jul 30th 2026, 10:01 am
image


கொழும்பு – தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


26 வயதுடைய குறித்த உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


போதைப்பொருளுடன் தெஹிவளை உப பொலிஸ் பரிசோதகர் கைது கொழும்பு – தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.26 வயதுடைய குறித்த உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement