• May 19 2024

வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி...! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 2:04 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்திற்கு 80 ஆயிரம் கிலோ சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கிலோ சீனி திரும்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண மக்களிற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் சீனியின் தாராதரம் பார்வையிடப்பட்ட பின்னர் வடக்கிற்கு குறித்த நிறுவனத்தால் 80 ஆயிரம் கிலோ சீனி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தரமற்ற சீனியாக அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோ சீனி அந்த நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது,

பொதுமக்களிற்கு தரமான பொருட்கள்  மாத்திரமே வழங்கப்படும். கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயமாகும்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவத்துடன் பேசப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட சீனிக்கு பதிலாக தரமான சீனி வழங்கப்படும். தரமற்ற பொருட்களை அனுப்பும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கு தரமான சீனி கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்விடயம் தொடர்பின் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்துகிறேன். மேலும் ஒரு தொகை சீனி பெற்றுக்கொள்வது தொடர்பிலும் பேசி வருகிறேன். மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்ட கூட்டுறவு சங்கத்தினரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.



வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி. அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.samugammedia வடக்கு மாகாணத்திற்கு 80 ஆயிரம் கிலோ சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கிலோ சீனி திரும்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண மக்களிற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.இந்த நிலையில் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.இந்த நிலையில் சீனியின் தாராதரம் பார்வையிடப்பட்ட பின்னர் வடக்கிற்கு குறித்த நிறுவனத்தால் 80 ஆயிரம் கிலோ சீனி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தரமற்ற சீனியாக அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோ சீனி அந்த நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது, பொதுமக்களிற்கு தரமான பொருட்கள்  மாத்திரமே வழங்கப்படும். கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயமாகும்.இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவத்துடன் பேசப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட சீனிக்கு பதிலாக தரமான சீனி வழங்கப்படும். தரமற்ற பொருட்களை அனுப்பும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கு தரமான சீனி கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பின் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்துகிறேன். மேலும் ஒரு தொகை சீனி பெற்றுக்கொள்வது தொடர்பிலும் பேசி வருகிறேன். மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்ட கூட்டுறவு சங்கத்தினரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement