• Nov 22 2024

இலங்கையில் காணி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Chithra / Jul 5th 2024, 3:33 pm
image

 

மேல் மாகாணத்தில் சராசரி காணி விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான ஆராய்ச்சி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது சந்தை அவதானிப்புகளுக்கமைய, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முதலாவது சரிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக கொழும்பு போன்ற நகரங்களில் நிலப்பற்றாக்குறை காரணமாகக் காணிகளின் பெறுமதிகள் அதிகரித்து வந்தன.

இலங்கையின் உள்நாட்டு மோதலின் போதும், கொழும்பில் காணி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வந்தன. 

எனினும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில், மேல் மாகாண புறநகர்ப் பகுதிகளில் காணிகளின் சராசரி விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மறுசீரமைப்புகளால் தூண்டப்பட்ட பலதரப்பட்ட காரணிகள் இந்த சரிவுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் காணி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.  மேல் மாகாணத்தில் சராசரி காணி விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான ஆராய்ச்சி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது சந்தை அவதானிப்புகளுக்கமைய, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முதலாவது சரிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.விசேடமாக கொழும்பு போன்ற நகரங்களில் நிலப்பற்றாக்குறை காரணமாகக் காணிகளின் பெறுமதிகள் அதிகரித்து வந்தன.இலங்கையின் உள்நாட்டு மோதலின் போதும், கொழும்பில் காணி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வந்தன. எனினும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில், மேல் மாகாண புறநகர்ப் பகுதிகளில் காணிகளின் சராசரி விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மறுசீரமைப்புகளால் தூண்டப்பட்ட பலதரப்பட்ட காரணிகள் இந்த சரிவுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement