• May 23 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளிப்பு

Chithra / Oct 9th 2025, 6:53 pm
image

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், செனவிரத்னவின் கூற்றுப்படி, அவர் 08.10.2025 அன்று உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகிய அமர்வின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். 

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகக் கூறும் எந்த அறிக்கையையும் தான் எந்த நேரத்திலும் வெளியிடவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

எனவே, இவ்வாறான தவறான தகவலை பரப்புவதற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளிப்பு  2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது.மேலும், செனவிரத்னவின் கூற்றுப்படி, அவர் 08.10.2025 அன்று உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகிய அமர்வின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகக் கூறும் எந்த அறிக்கையையும் தான் எந்த நேரத்திலும் வெளியிடவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.எனவே, இவ்வாறான தவறான தகவலை பரப்புவதற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement