• May 21 2024

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவுக்கு இரங்கல் தெரிவித்த சுமந்திரன்!

Tharun / May 10th 2024, 5:34 pm
image

Advertisement

சூழலை விருத்தி செய்வது தொடர்பில் முன்னாள்  வன விலங்கு அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரேரா முன்னுதாரணமாக செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ள அனுதாப உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அவர் வன விலங்கு அமைச்சராக பதவி வகித்த போது சில பிரதேசங்களை அடையாளப்படுத்தினார். அது வன வளங்களின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டது. எனவே மிக நீண்டகாலமாக யுத்தம் இடம்பெற்றது. அதில் பல சிக்கல்கள் காணப்பட்டது. அதில் அவர் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை நோக்கி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பலரை உள்ளடக்கியதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் ஒரு கூட்டத்தை நடத்தி உண்மையான நிலைமையை கண்டறிந்து அதிகாரிகளை மீண்டும் எல்லைகளை பணித்தார். 

சாதாரண மக்களுக்கு அவர்களுடைய நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படாதவாறு அந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் பணித்தார். அதிகாரிகள் அந்த விடயத்தை செய்வதற்கு தயங்கினார்கள். 

அவர்கள் என்னையும் அமைச்சுக்கு அழைத்தார்கள். நான் அங்கு சென்றேன். அவர்களை அழைத்தோம். ஏனிந்த தாமதம் என்று நாங்கள் வினா எழுப்பினோம் . இன்றும் கூட அது இடம்பெறவில்லை. தற்போதைய ஜனாதிபதியின் கீழ்  2023 ஜனவரி 7 ஆம் திகதி தீர்மானத்தை மேற்கொண்டது. 

1985 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயத்துக்கு ஏற்றவாறு அதனை மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது காமினி ஜெயவிக்ரம பெரேரா அமைச்சராக கடமையாற்றினார். எனவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். 

அவர் முதலமைச்சராக இருக்கும் போது முதலாவது மாகாணசபை வயம்பவில் முதலமைச்சராக அவர் கடமையாற்றினார். மாகாணசபைகள் அவர்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட தத்துவங்களை கொண்டு ஏனைய நாட்டுக்கும் முழு நாட்டுக்கும்  அவர் காட்டினார். சுற்றாடலை எவ்வாறு விருத்தி செய்வது என்பது தொடர்பில் தொடர்பில் மாகாண சட்டவாக்கத்தில் எவ்வாறு இதனை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவர் முன்னுதாரணமாக செயல்பட்டார். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவுக்கு இரங்கல் தெரிவித்த சுமந்திரன் சூழலை விருத்தி செய்வது தொடர்பில் முன்னாள்  வன விலங்கு அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரேரா முன்னுதாரணமாக செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ள அனுதாப உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் வன விலங்கு அமைச்சராக பதவி வகித்த போது சில பிரதேசங்களை அடையாளப்படுத்தினார். அது வன வளங்களின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டது. எனவே மிக நீண்டகாலமாக யுத்தம் இடம்பெற்றது. அதில் பல சிக்கல்கள் காணப்பட்டது. அதில் அவர் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை நோக்கி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பலரை உள்ளடக்கியதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் ஒரு கூட்டத்தை நடத்தி உண்மையான நிலைமையை கண்டறிந்து அதிகாரிகளை மீண்டும் எல்லைகளை பணித்தார். சாதாரண மக்களுக்கு அவர்களுடைய நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படாதவாறு அந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் பணித்தார். அதிகாரிகள் அந்த விடயத்தை செய்வதற்கு தயங்கினார்கள். அவர்கள் என்னையும் அமைச்சுக்கு அழைத்தார்கள். நான் அங்கு சென்றேன். அவர்களை அழைத்தோம். ஏனிந்த தாமதம் என்று நாங்கள் வினா எழுப்பினோம் . இன்றும் கூட அது இடம்பெறவில்லை. தற்போதைய ஜனாதிபதியின் கீழ்  2023 ஜனவரி 7 ஆம் திகதி தீர்மானத்தை மேற்கொண்டது. 1985 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயத்துக்கு ஏற்றவாறு அதனை மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது காமினி ஜெயவிக்ரம பெரேரா அமைச்சராக கடமையாற்றினார். எனவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். அவர் முதலமைச்சராக இருக்கும் போது முதலாவது மாகாணசபை வயம்பவில் முதலமைச்சராக அவர் கடமையாற்றினார். மாகாணசபைகள் அவர்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட தத்துவங்களை கொண்டு ஏனைய நாட்டுக்கும் முழு நாட்டுக்கும்  அவர் காட்டினார். சுற்றாடலை எவ்வாறு விருத்தி செய்வது என்பது தொடர்பில் தொடர்பில் மாகாண சட்டவாக்கத்தில் எவ்வாறு இதனை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவர் முன்னுதாரணமாக செயல்பட்டார். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement