• Nov 23 2024

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச்: நாசா வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Tamil nila / Aug 25th 2024, 8:02 pm
image

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை 08 நாட்களில் நிறைவு செய்து பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.

வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச்: நாசா வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை 08 நாட்களில் நிறைவு செய்து பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement