ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதற்கு நான் மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன்..
எனது அரசியல் வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் இது மிகவும் முக்கியமான தருணம்,
எனது 15 வருட பாராளுமன்ற அனுபவத்துடன் எனது நாத்தாண்டி தொகுதிக்கும் புத்தளம் மாவட்டத்திற்கும் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே நம்பிக்கை.
முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
அவருக்கு அம்பலாங்கொடை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சஜித்துக்கு வலுக்கும் ஆதரவு. எதிர்க்கட்சியுடன் கைகோர்த்த முன்னாள் எம்.பி தயாஸ்ரீத திசேரா. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில்,நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதற்கு நான் மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். எனது அரசியல் வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் இது மிகவும் முக்கியமான தருணம், எனது 15 வருட பாராளுமன்ற அனுபவத்துடன் எனது நாத்தாண்டி தொகுதிக்கும் புத்தளம் மாவட்டத்திற்கும் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே நம்பிக்கை.முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.அவருக்கு அம்பலாங்கொடை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.