• Nov 24 2024

தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளி சஜித்திற்கு ஆதரவு- தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒரு பாரதூரமான விடயம்- சுப்பிரமணியம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 2nd 2024, 3:35 pm
image

தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாக வாக்கினை செலுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியானது தீர்மானித்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சிகள் சிவில் சமூகங்கள், பொது அமைப்புகள் என 89 அமைப்புக்கள் ஒன்றிணைந்து, மக்களது கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கான ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்துள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்கும்போது இலங்கை தமிழரசு கட்சியானது மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானமாக சஜித் பிரேமதாசவை  ஆதரிப்பதான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அது ஒரு சிந்தனையில்லாத, பாரதூரமான, மக்களுக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

அதுமட்டுமில்லாமல் அவர்களது கட்சியின் மத்திய குழு உறுப்பினரான  அரியநேந்திரன், இந்த ஜனாதிபதி போட்டியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளமை மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.

இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் தமிழ் மக்களிடையேயான ஒரு ஜனாதிபதியாக கருதப்படுவாரே தவிர இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை சிங்கள பெரும்பான்மையினத்துக்கே காணப்படுகின்றது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒரே அணியில் நிற்கின்றோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒரு இலக்கினை நோக்கி நகர்கின்றோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இனப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வை தேடி பயணிக்கின்றோம், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றோம் என்பதை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சங்கின் ஊடாக பறைசாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.

இது இவ்வாறு இருக்கையில், ஓரளவாவது அரசியல் ஞானம் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பொறுப்பாளர் ஒருவர், தான் உட்பட தமிழ் மக்கள் அனைவரும் முதல் வாக்கினை சங்கிற்கு அளித்துவிட்டு ஏனைய விருப்பு வாக்கினை தமது கட்சியின் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார். அவர் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றுதலை ஒரு அரசியல் ஞானத்துடன் கூறி இருக்கின்றார்.

இதே வேளையில் தமிழரசு கட்சியானது ஒட்டுமொத்தமாக நேரடியாக சஜித் பிரேமதாஸவுக்கு மட்டும் ஆதரவினை அளித்திருப்பது ஒரு அரசியல் ஞானம் அற்ற, அல்லது தமிழ் மக்கள் மீது பற்றற்ற நிலையை எடுத்துக்காட்டுகின்றது.

இவர்கள் இது குறித்து தமக்குள் கருத்து வேறுபாடு இருந்திருந்தாலும், மக்களுடைய கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். அடுத்ததாக தமது மத்திய குழுவை முழுமையாக கூடியிருக்க வேண்டும். மத்திய குழுவில் இருக்கின்ற சிலர் இந்தக் கூட்டம் கூட்டியமை குறித்து தமக்குத் தெரியாது என கூறியிருக்கின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தில் சி.சிறிதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்ததுடன், சங்கு சின்னத்தை தானே சரி செய்ததாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாங்கள் ஏக மனதாக தீர்மானம் எடுத்ததாக சுமந்திரன் கூறுகின்றார்.

எது அவ்வாறாயினும் சுமந்திரன், அரியநேந்திரனுக்கு வாக்கினை போடுவதற்கு விருப்பமில்லாத விட்டாலும், தமிழ் மக்களுக்காக முதலாவது வாக்கினை சங்கிற்கு போட்டுவிட்டு மத்திய வாக்கினை சஜித் பிரேமதாசவுக்கு போடுங்கள் என சொல்லி இருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டு, தமிழ் மக்களுடைய கருத்தினை கேட்காமல், எங்களை அழித்து எமது இனத்திற்கு எதிராக செயற்பட்ட, பிரேமதாசாவின் பரம்பரையில் வந்த, ஜே.ஆர்.ஜெயவர்த்தினவின் வளர்ப்பில் வந்த சஜித் பிரேமதாஸவுக்கு  வாக்கினை போடுமாறு கூறுவது என்பது மிகவும் ஒரு ஆபத்தான அல்லது தமிழ் மக்களை ஏமாற்றமடைய வைக்கின்ற ஒரு விடயமாகத்தான் நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளி சஜித்திற்கு ஆதரவு- தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒரு பாரதூரமான விடயம்- சுப்பிரமணியம் சுட்டிக்காட்டு. தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாக வாக்கினை செலுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியானது தீர்மானித்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சிகள் சிவில் சமூகங்கள், பொது அமைப்புகள் என 89 அமைப்புக்கள் ஒன்றிணைந்து, மக்களது கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கான ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்துள்ளார்கள்.இது இவ்வாறு இருக்கும்போது இலங்கை தமிழரசு கட்சியானது மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானமாக சஜித் பிரேமதாசவை  ஆதரிப்பதான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அது ஒரு சிந்தனையில்லாத, பாரதூரமான, மக்களுக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற ஒரு நிலைப்பாடாகும்.அதுமட்டுமில்லாமல் அவர்களது கட்சியின் மத்திய குழு உறுப்பினரான  அரியநேந்திரன், இந்த ஜனாதிபதி போட்டியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளமை மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும். இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் தமிழ் மக்களிடையேயான ஒரு ஜனாதிபதியாக கருதப்படுவாரே தவிர இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை சிங்கள பெரும்பான்மையினத்துக்கே காணப்படுகின்றது.ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒரே அணியில் நிற்கின்றோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒரு இலக்கினை நோக்கி நகர்கின்றோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இனப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வை தேடி பயணிக்கின்றோம், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றோம் என்பதை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சங்கின் ஊடாக பறைசாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.இது இவ்வாறு இருக்கையில், ஓரளவாவது அரசியல் ஞானம் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண பொறுப்பாளர் ஒருவர், தான் உட்பட தமிழ் மக்கள் அனைவரும் முதல் வாக்கினை சங்கிற்கு அளித்துவிட்டு ஏனைய விருப்பு வாக்கினை தமது கட்சியின் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார். அவர் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றுதலை ஒரு அரசியல் ஞானத்துடன் கூறி இருக்கின்றார்.இதே வேளையில் தமிழரசு கட்சியானது ஒட்டுமொத்தமாக நேரடியாக சஜித் பிரேமதாஸவுக்கு மட்டும் ஆதரவினை அளித்திருப்பது ஒரு அரசியல் ஞானம் அற்ற, அல்லது தமிழ் மக்கள் மீது பற்றற்ற நிலையை எடுத்துக்காட்டுகின்றது.இவர்கள் இது குறித்து தமக்குள் கருத்து வேறுபாடு இருந்திருந்தாலும், மக்களுடைய கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். அடுத்ததாக தமது மத்திய குழுவை முழுமையாக கூடியிருக்க வேண்டும். மத்திய குழுவில் இருக்கின்ற சிலர் இந்தக் கூட்டம் கூட்டியமை குறித்து தமக்குத் தெரியாது என கூறியிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் சி.சிறிதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்ததுடன், சங்கு சின்னத்தை தானே சரி செய்ததாக சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் தாங்கள் ஏக மனதாக தீர்மானம் எடுத்ததாக சுமந்திரன் கூறுகின்றார்.எது அவ்வாறாயினும் சுமந்திரன், அரியநேந்திரனுக்கு வாக்கினை போடுவதற்கு விருப்பமில்லாத விட்டாலும், தமிழ் மக்களுக்காக முதலாவது வாக்கினை சங்கிற்கு போட்டுவிட்டு மத்திய வாக்கினை சஜித் பிரேமதாசவுக்கு போடுங்கள் என சொல்லி இருக்கலாம்.ஆனால் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டு, தமிழ் மக்களுடைய கருத்தினை கேட்காமல், எங்களை அழித்து எமது இனத்திற்கு எதிராக செயற்பட்ட, பிரேமதாசாவின் பரம்பரையில் வந்த, ஜே.ஆர்.ஜெயவர்த்தினவின் வளர்ப்பில் வந்த சஜித் பிரேமதாஸவுக்கு  வாக்கினை போடுமாறு கூறுவது என்பது மிகவும் ஒரு ஆபத்தான அல்லது தமிழ் மக்களை ஏமாற்றமடைய வைக்கின்ற ஒரு விடயமாகத்தான் நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement