• Nov 23 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

Chithra / Jul 23rd 2024, 11:49 am
image

 

அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உரிய அதிகாரிகளுடன் விசேட நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டதன் பின்னர் கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அனைவரையும் ஆசிரியப்பணிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அமைச்சரவையில் சமர்பிப்பார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களுக்கு தீர்வு காணுமாறு கோரி மனுக்கள் கோரப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு  அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.உரிய அதிகாரிகளுடன் விசேட நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டதன் பின்னர் கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யும் அனைவரையும் ஆசிரியப்பணிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அமைச்சரவையில் சமர்பிப்பார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.இதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களுக்கு தீர்வு காணுமாறு கோரி மனுக்கள் கோரப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement