• Apr 16 2026

சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்!

shanu / Apr 6th 2026, 5:01 pm
image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


தனது சட்டத்தரணிகள் ஊடாக சுரேஷ் சலே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன,ரோஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடுத்துவைப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.தனது சட்டத்தரணிகள் ஊடாக சுரேஷ் சலே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன,ரோஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடுத்துவைப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement