நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.
குறிப்பாக லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகள் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், யாழில் கரட் ஒருகிலோ ஆயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சில தினங்களாக பழங்களின் விலைகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக யாழ் குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
அதில் கதலி வாழைப்பழத்தின் விலை என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது.
கடந்த வருட ஒக்ரோபர் மாதத்தில் வீசிய காற்றால் வாழைமரங்கள் நோயால் பாதிக்கப்பட்டன எனவும் இதனால் உற்பத்தி வீழ்ச்சியுற்று சந்தைகளுக்கு குறைந்தளவு வாழைக்குலைகளே வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.
குறிப்பாக கதலி வாழைப்பழம் தற்போது கிலோ 150 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வாழைப்பழ பிரியர்களுக்கு அதிர்ச்சி. யாழில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.குறிப்பாக லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகள் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், யாழில் கரட் ஒருகிலோ ஆயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை சில தினங்களாக பழங்களின் விலைகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.குறிப்பாக யாழ் குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதில் கதலி வாழைப்பழத்தின் விலை என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது.கடந்த வருட ஒக்ரோபர் மாதத்தில் வீசிய காற்றால் வாழைமரங்கள் நோயால் பாதிக்கப்பட்டன எனவும் இதனால் உற்பத்தி வீழ்ச்சியுற்று சந்தைகளுக்கு குறைந்தளவு வாழைக்குலைகளே வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.குறிப்பாக கதலி வாழைப்பழம் தற்போது கிலோ 150 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.