இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் தெரிவித்த காணொளி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் உயிரிழந்தார்.
ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே இணைந்து கொண்டார்.
தொரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடிக்கொண்டிருந்த போதே தந்தை உயிரிழந்து விட்டார் என்ற தகவல் நிர்வாகத்தினருக்கு கிடைக்கப்பெற்றது.
போட்டி நிறைவடைந்தவுடன் அணி நிர்வாகத்தினால் துனித்தின் தந்தை உயிரிழந்த செய்தி அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்குத் திரும்பினார்.
பின்னர் மறுநாளே மீண்டும் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், துனித்தின் தந்தை உயிரிழப்பு இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன் துனித் வெல்லாலகேவின் தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கின்றது.
தந்தையை இழந்து அணியில் இணைந்த துனித் வெல்லாலகே; ஆறுதல் தெரிவித்த சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் தெரிவித்த காணொளி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் உயிரிழந்தார். ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே இணைந்து கொண்டார். தொரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடிக்கொண்டிருந்த போதே தந்தை உயிரிழந்து விட்டார் என்ற தகவல் நிர்வாகத்தினருக்கு கிடைக்கப்பெற்றது. போட்டி நிறைவடைந்தவுடன் அணி நிர்வாகத்தினால் துனித்தின் தந்தை உயிரிழந்த செய்தி அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் மறுநாளே மீண்டும் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், துனித்தின் தந்தை உயிரிழப்பு இரங்கல் தெரிவித்தார். அத்துடன் துனித் வெல்லாலகேவின் தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கின்றது.