பெண்னொருவரை கொலை செய்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை கொலை செய்யத் தயாராகவிருந்த நிலையில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகே முன்னிலையில் பிரச்சனப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர், கொலை செய்வதற்குத் தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் அந்த பகுதியில் உள்ள பெண்ணொருவரை கொலை செய்யுமாறு சந்தேகநபரிடம் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
கொலை செய்யுமாறு சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்த வர்த்தகரால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தகரிடம் மேலும் பல துப்பாக்கிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்னொருவரை கொலைசெய்ய ஒரு கோடி ரூபாவிற்கு ஒப்பந்தம்- கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் பெண்னொருவரை கொலை செய்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை கொலை செய்யத் தயாராகவிருந்த நிலையில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகே முன்னிலையில் பிரச்சனப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர், கொலை செய்வதற்குத் தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் அந்த பகுதியில் உள்ள பெண்ணொருவரை கொலை செய்யுமாறு சந்தேகநபரிடம் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கொலை செய்யுமாறு சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்த வர்த்தகரால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தகரிடம் மேலும் பல துப்பாக்கிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.