• Jan 16 2025

நாட்டின் பல்வேறு இடங்களில் நகைகளை திருடிய சந்தேக நபர் கைது !

Tharmini / Jan 12th 2025, 4:19 pm
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் மோதர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் - முந்தல் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோதர, நீர்கொழும்பு, கிரிபத்கொட, புத்தளம், முந்தல், குளியாபிட்டிய, வென்னப்புவ, பேலியகொட மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 8 தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக நாடு முழுவதும் 17 வழக்குகள் உள்ளதாகவும், குறித்த வழக்கு விசாரணைகளை தவிர்த்து வந்ததன் காரணமாக சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களால் 11 பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் நகைகளை திருடிய சந்தேக நபர் கைது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் மோதர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் - முந்தல் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோதர, நீர்கொழும்பு, கிரிபத்கொட, புத்தளம், முந்தல், குளியாபிட்டிய, வென்னப்புவ, பேலியகொட மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 8 தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக நாடு முழுவதும் 17 வழக்குகள் உள்ளதாகவும், குறித்த வழக்கு விசாரணைகளை தவிர்த்து வந்ததன் காரணமாக சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களால் 11 பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement