• Sep 17 2024

வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Tamil nila / Sep 3rd 2024, 6:38 pm
image

Advertisement

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் இன்றைய தினம் (03/09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் 

விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த் அவர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

இவர்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் குணத்திலக்க, மற்றும் பொலிஸ் சார்ஜன்டுகளான விஜேசிங்க(12535), மெதகொட(70812), மேலும் பொலிஸ் கொன்ஸ்தாபிள் கிரிநாத் ஆகியோரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் இன்றைய தினம் (03/09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த் அவர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்இவர்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் குணத்திலக்க, மற்றும் பொலிஸ் சார்ஜன்டுகளான விஜேசிங்க(12535), மெதகொட(70812), மேலும் பொலிஸ் கொன்ஸ்தாபிள் கிரிநாத் ஆகியோரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement