• Mar 05 2026

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை!

shanu / Feb 11th 2026, 9:54 am
image

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே தேரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 


இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண.திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண.பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண.நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டுளள்னர். 

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே தேரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண.திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண.பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண.நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டுளள்னர். 

Advertisement

Advertisement

Advertisement