• Mar 05 2026

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி விசாரணை!

Chithra / Feb 11th 2026, 9:51 am
image

 

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர். இதன்போது பொலிஸாரிடமும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.


அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில்  பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்ந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ  அறிவித்துள்ளது.

யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு அதிரடி விசாரணை  யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர். இதன்போது பொலிஸாரிடமும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில்  பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்ந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ  அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement