• Mar 05 2026

மன்னாரில் திறக்கப்படாமல் இருக்கும் பாதைகள் - அமைச்சர் எடுத்த நடவடிக்கை

Chithra / Feb 11th 2026, 9:37 am
image


மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மன்னாரில் நேற்று மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் .


அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும்  அதற்கான சட்டம்  மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன.


இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக  பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது.


இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.


எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மன்னாரில் திறக்கப்படாமல் இருக்கும் பாதைகள் - அமைச்சர் எடுத்த நடவடிக்கை மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மன்னாரில் நேற்று மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் .அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும்  அதற்கான சட்டம்  மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன.இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக  பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது.இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement